Home தாயகம் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் – பதவியும் இறக்கம்

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் – பதவியும் இறக்கம்

யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்கவுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி களனி பொலிஸ் பிராந்தியத்திற்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில்

பொலிஸ் உயர்மட்டத்தினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. களனி பொலிஸ் பிராந்தியத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டு

சூப்பர் நியூமரரி நிலை (Supernumerary position) என்ற வகையில் இடமாற்றப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் அச்சுறுத்தல்,

கையூட்டுப் பெறல், முறைப்பாடுகளை தட்டிக்கழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பட்டு வந்த நிலையில்

பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது