Home இலங்கை கொழும்பு மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் ஊரடங்கை இறுக்கமாக்குங்கள் – அரசுக்கு அழுத்தம்

மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் ஊரடங்கை இறுக்கமாக்குங்கள் – அரசுக்கு அழுத்தம்

தடுப்பூசியை பெற்றுவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மதிப்பதே இல்லை. என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை வெளியிட்டிருக்கின்றது.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் நோயாளிகளை பராமரிக்கவேண்டிய நிலை ஏற்படும் என உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

கொரோன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது எங்கள் பணியாளர்களினால் நிலைமையை கண்காணிக்க முடியாத நிலைக்கு நாங்கள் வந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.