Home இலங்கை கொழும்பு 1ம் திகதி நாடு திறக்கப்படவேண்டும் – ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்பு

1ம் திகதி நாடு திறக்கப்படவேண்டும் – ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்பு

ஒக்டோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் நாட்டை திறப்பதற்கு தேவையான திட்டத்தை தயாரிக்கும்படி ஜனாதிபதி தமக்கு பணித்துள்ளதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய, ஒவ்வொரு துறையினரும் தமக்கான திட்டங்களை தற்போது தயாரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர்,

அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் விதம் குறித்த கலந்துரையாடல் இன்று (27) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.