Home பிரித்தானியா இங்கிலாந்து நொடிப் பொழுதில் தரைமட்டமாக்கப்பட்ட 300 அடி குளிரூட்டும் கோபுரங்கள்

நொடிப் பொழுதில் தரைமட்டமாக்கப்பட்ட 300 அடி குளிரூட்டும் கோபுரங்கள்

இங்கிலாந்தில் பயன்பாடின்றி இருந்த மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்கள் நொடிப்பொழுதில் வெடிவைத்து தரைமட்டமாக்கப்பட்டன.

8 பிரமாண்ட குளிரூட்டும் கோபுரங்களைக் கொண்ட எக்பரோ (Eggborough) மின் நிலையம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக யார்க் ஷைர்-ன் (Yorkshire) அடையாளமாக விளங்கியது.

பல ஆண்டுகளாக மின் நிலையம் பயன்பாடின்றி இருந்ததால் அதன் ஒரு பகுதியை மறு கட்டமைப்பு செய்வதற்காக 4 குளிரூட்டும் கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. 300 அடி உயர கோபுரங்கள் ஒரே சமயத்தில் தகர்க்கப்பட்டதால் வானுயரப் புழுதி எழும்பியது.