Home இலங்கை கொழும்பு இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.

இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.

இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிவந்த சுமார் 800 கொள்கலன்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களின் பங்குகளை விடுவிப்பதன் மூலம் எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளை தவிர்த்துக்கொள்ள முடியும்.

இல்லையேல் அனைத்து இறக்குமதிகளும் நிறுத்தப்படுவதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஐப்பசி மாத இறுதிவரை மட்டுமே போதுமானவையாகக் காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.