Home சமூக சீர்கேடு கொரோனாவில் குணமடைந்து வீடு திரும்பிய பெண் கற்பழிப்பு..!

கொரோனாவில் குணமடைந்து வீடு திரும்பிய பெண் கற்பழிப்பு..!

கொரோனாவில் குணமடைந்த பெண் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் வீட்டிற்கு நடந்து சென்ற போது கற்பழிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

அசாம் மாநிலத்தின் சாரைடியோ மாவட்டத்தில் 40 வயது பெண்மணி ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு, அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால், தனது மகளுடன் தானாக வீட்டிற்கு புறப்பட்டார். ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்ததால் வாகனங்களும் கிடைக்கவில்லை. அங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அவர்களது வீடு இருந்தது. நடந்துசென்றபடி வீடுநோக்கி சென்று கொண்டிருந்தனர்.

கடந்த 27-ந்தேதி இரவு 7 மணி அளவில் ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் நடந்து வந்தபோது 2 ஆண்கள் அவர்களை வழிமறித்தனர். அவரை தூக்கிச் சென்று தேயிலை தோட்டத்திற்குள் வைத்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர். அவரது மகள், ஓடி தப்பித்துவிட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் 2 பேரையும் கைது செய்தனர். கொரோனா நோயாளி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

CLICK TO CALL இந்தியா vs இலங்கை டி 20
இலங்கைT20 சம்மரி லைவ்