Home இலங்கை அனுராதபுரம் விபத்தில் முகம் சிதைவடைந்து ஒருவர் மரணம்

விபத்தில் முகம் சிதைவடைந்து ஒருவர் மரணம்

அநுராதபுரம் மாவட்டம், கலென்பிந்துனுவெவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட யக்கல கல்குளம் வீதி, குட்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறை ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

புளியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரே மரணமடைந்துள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் முகம் சிதைவடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.