Home சர்வதேசம் ஐரோப்பா உலகில் முதல் முறையாக கருவுற்ற நிலையில் உள்ள மம்மி; ஆராச்சியாளர்கள் பேரதிர்ச்சி..!

உலகில் முதல் முறையாக கருவுற்ற நிலையில் உள்ள மம்மி; ஆராச்சியாளர்கள் பேரதிர்ச்சி..!

உலகில் முதல் முறையாக கருவுற்ற நிலையில் உள்ள மம்மியை ஆராச்சியாளர்கள் போலந்து நாட்டில் கண்டுபிடித்து உள்ளனர். 19-ஆம் நூற்றாண்டில் போலாந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மம்மியை ஆராச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

அதில் குறித்த மம்மியின் உடல் வாகுவை கொண்டு பாதிரியர் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் ஆய்வு மேற்கொண்ட ஆராச்சியாளர்களுக்கு பேரதிர்ச்சியாக பாதிரியார் என நினைத்த மம்மி ஒரு கர்ப்பிணி பெண் என்பது தெரியவந்துள்ளது.அந்த மம்மிக்கு 20-30 வயது இருக்கலாம் என்றும் அதன் வயிற்றில் 26 முதல் 28 வார சிசு இருந்ததாகவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து பேசிய தொல்பொருள் ஆராச்சியாளர்கள் “இதுதான் உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில் நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண் மம்மி.மேலும்,போலந்து தலைநகர் வார்சாவில் 1826 இல் இந்த மம்மி கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அந்த கல்வெட்டில் இது ஒரு ஆண் பாதிரியார் என்றும் இருந்துள்ளது. தற்போது, அது ஆண் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர்.ஏன்னென்றால், அதில் மார்பகங்களும், நீண்ட கூந்தலும் இருந்தது எனவும் மேலும் அந்த மம்மியை ஸ்கேன் செய்து பாத்ததில் சிறிய கால் ஒன்றை கண்டோம் எனவே அது ஒரு கர்ப்பிணி பெண்” என தெரிவித்தனர்

CLICK TO CALL இந்தியா vs இலங்கை டி 20
இலங்கைT20 சம்மரி லைவ்