Home இலங்கை கொழும்பு சுகாதார பிரிவினர் வேலைநிறுத்தத்தில்

சுகாதார பிரிவினர் வேலைநிறுத்தத்தில்

சுகாதார பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் இன்று (27) காலை 7 மணி முதல் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

மதியம் 12 மணி முதல் 5 மணி நேரம் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

44 தொழிற்சங்கங்கள் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.