Home சினிமா 110 கிலோ குண்டான அரவிந்த்சாமி எப்படி உடல் எடையை குறைத்தார் தெரியுமா?

110 கிலோ குண்டான அரவிந்த்சாமி எப்படி உடல் எடையை குறைத்தார் தெரியுமா?

மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக டைரக்ட்டர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் எனும் நாவலை மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். நடிகர் அரவிந்த்சாமிக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தது மணிரத்தினம்.

அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அரவிந்த் சாமி. இப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.

என்னதான் ஒரு மனிதனுக்கு வாழ்வில் வெற்றிகள் வந்தாலும் தோல்விகள் வருவது ஒன்றும் புதிதல்ல அப்படி அரவிந்த் சாமிக்கு ஒருகாலத்தில் தோல்விகள் மட்டுமே குவிந்தன. அதனால் சினிமாவை விட்டு விலகி பல வருடங்கள் தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

அதுமட்டுமில்லாமல் அரவிந்த்சாமிக்கு ஒரு விபத்து ஏற்பட சிகிச்சை பெற்று 110 கிலோவுக்கு மேல் உடல் எடையை வைத்திருந்தார். எப்படி தனது சினிமாவில் முதல் வாய்ப்பு மணிரத்தினம் கொடுத்தாரோ அதே போல அரவிந்த் சாமியின் ரீஎன்ட்ரீக்கும் மணிரத்னம்தான் வாய்ப்பு கொடுத்தார்.

அதாவது கடல் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்க வைக்க மணிரத்தினம் முயற்சித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் உங்களது உடல் எடையை குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதனால் 15 கிலோ உடல் எடையை குறைத்து மீண்டும் கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதாவது அரவிந்த் சாமிக்கு ஆரம்பத்திலும், ரீ-என்ட்ரிலும் வாய்ப்பு கொடுத்தது மணிரத்தினம் தான். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு நட்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

CLICK TO CALL இந்தியா vs இலங்கை டி 20
இலங்கைT20 சம்மரி லைவ்