Home மலையகம் மாத்தளை 14 வயது சிறுமியின் மரணம் – வெளியான உண்மை காரணம்

14 வயது சிறுமியின் மரணம் – வெளியான உண்மை காரணம்

சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுமியின் மரணத்துக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

தம்புள்ளையில் பாழடைந்த வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 14 வயது சிறுமியின் சடலத்தின் பிரேத பரிசோதையானது நேற்று தம்புள்ளை பொது மருத்துவமனையில் நடைபெற்றது.

அதன்போது சிறுமியின் மரணமானது வன்முறை செயல் காரணமாக ஏற்பட்டதாக பரிசோதனையின் முடிவில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பரிசோதனைக்காக சிறுமியின் உடல் பாகங்கள் ஆய்வாளர் துறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும் சிறுமி எந்த முறையில் கொல்லப்பட்டார் என்பது தற்போது வரையில் தெரியவில்லை. கொலையில் தொடர்புடைய தம்பாஹியை பொலிஸார் கைது செய்து தற்போது ஆரம்பகட்ட விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.