Home இந்தியா தமிழ்நாடு தமிழ்நாட்டில் மேலும் 1, 971 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் மேலும் 1, 971 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில், கொரோனா 2- வது அலையில் முதன்முறையாக தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழாக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 971 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 209ஆக குறைந்துள்ளது. சென்னையில் வைரஸ் தொற்று பாதிப்பு 147ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரத்து 558 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 27 ஆயிரத்து 282 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல் வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

CLICK TO CALL இந்தியா vs இலங்கை டி 20
இலங்கைT20 சம்மரி லைவ்