Home இலங்கை தாயகம் வடமாகாண பிரத செயலாளராக பெரும்பான்மை இனத்தவர் நியமனம்

வடமாகாண பிரத செயலாளராக பெரும்பான்மை இனத்தவர் நியமனம்

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் தெரிவில் ஏற்பட்டிருந்த இழுபறி நிலை தற்போது முடிவுக்கு வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. வவுனியா மாவட்டச் செயலர் சமன் பந்துல சேன குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் பிரதம செயலாளர் பத்திநாதன் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் அவரை மேலும் ஆறு மாத காலம் பணியில் அமர்த்துமாறு வடக்கின் அதி உயர் நிர்வாக பீடம் வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கு கொழும்பு உயர்பீடம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தெய்வேந்திரன் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுவிட்டதாகவும் அதற்கான பரிந்துரையை அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கிவரும் தனியார் அமைப்பு முன்வைத்திருப்பதாகவும் அதனால் தெய்வேந்திரன் சில நாட்களில் பதவி ஏற்பார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

குறித்த தகவலை வடக்கின் உயர் செயலகம் ஒன்றில் பணியாற்றும் தெய்வேந்திரனுக்கு நெருக்கமான பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி ஒருவர் வெளியிட்டிருந்தார்.

தெய்வேந்திரன் தெரிவு செய்யப்பட்டிருந்தபோதிலும் அதனை நடைமுறைப்படுத்துவற்கு வடக்கின் அதி உயர் பீட அதிகாரி கடும் ஆட்சேபனை வெளியிட்டுவந்த நிலையில் இன்று வவுனியா மாவட்டச் செயலர் சமன் பந்துலசேன குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் நடைபெற்ற வடக்கின் கல்வி உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, தன்னை குறித்த பதவியில் அமருமாறு அரசாங்கம் கோரியிருந்ததாகவும் இருந்தபோதிலும் வடக்கிற்கு தமிழர் ஒருவரே பொருத்தமாக இருப்பார் என்பதால் தான் அதனை நிராகரிப்பதாகவும் பந்துலசேன தெரிவித்திருந்தார்.

இருந்தபோதிலும் இன்று அவருக்கான நியமனம் குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், இதனை அடுத்து வவுனியா மாவட்டச் செயலர் பதவிக்கு வடக்கின் உயர் அதிகாரிகளில் ஒருவரான சிவபாதசுந்தரம், பிரதேச செயலர் சுகந்தி துரைச்சாமி உட்பட்ட சில அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

CLICK TO CALL இந்தியா vs இலங்கை டி 20
இலங்கைT20 சம்மரி லைவ்